ஆசிய பங்குச் சந்தைகளில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் தங்கள் பணத்தை வெளியே எடுத்து வருகின்றனர். ‘புளூம்பெர்க்’ வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, கடந்த வாரம் மட்டும், சீனாவை தவிர்த்து வளர்ந்து வரும் ஆசிய சந்தைகளில் இருந்து கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இது, கடந்த 2022 மார்ச் மாதத்துக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வெளியேற்றமாகும்.
