குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்திலேயே தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிப்டி வர்த்தகம், இரண்டரை மணியளவில் திடீரென கணிசமான இறக்கத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 315 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி மைக்ரோகேப் 250’ குறியீடு, குறைந்தபட்சமாக 0.09 சதவீத இறக்கத்துடனும்; ‘நிப்டி 100’ குறியீடு அதிகபட்சமாக 1.12 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 16 குறியீடுகள் இறக்கத்துடனும்; 3 குறியீடுகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி பிரைவேட் பேங்க்’ குறியீடு அதிகபட்சமாக 2.27 சதவீத இறக்கத்துடனும்; ‘நிப்டி கெமிக்கல்ஸ்’ குறியீடு அதிகபட்சமாக 0.17 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,294 பங்குகளில் 1,315 ஏற்றத்துடனும்; 1,872 இறக்கத்துடனும்; 107 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. மீண்டும் குறுகிய கால சராசரிகளுக்கு கீழே நிப்டி நிறைவடைந்துள்ளது. கிட்டத்தட்ட பியரிஷ் டிரெண்ட்டில் இருப்பதை போன்ற தோற்றத்தை இது உருவாக்கியுள்ளது. எம்.ஏ.சி.டி., ஆர்.ஓ.சி., ஆர்.எஸ்.ஐ., மற்றும் ‘ஸ்டோக்காஸ்டிக் இண்டிகேட்டர்’கள் இன்னும் இறக்கம் வரவாய்ப்புள்ளது என்பதையே காட்டுகின்றன. இருந்தபோதிலும் செய்திகள் சாதகமாக இருந்தால், இவற்றை பொய்யாக்கிவிட்டு, நிப்டி மேலே சென்றுவிடக்கூடும். தற்போதைய முக்கிய டெக்னிக்கல் ரெசிஸ்டன்ஸ் 24,750-ல் இருக்கிறது. அதே போல் 24,300-ல் ஒரு முக்கிய டெக்னிக்கல் சப்போர்ட்டும்; அதை தாண்டினால் 24,000-த்தில் ஒரு சப்போர்ட்டும் தற்போதைய சூழலில் இருக்கிறது.
ஆதரவு 24,325 24,225 24,125
தடுப்பு 24,625 24,800 24,915
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)
நிப்டி 50 (எண்ணிக்கை)
எட்டர்னல் 233.04 -7.10
ஹெச்.டி.எப்.சி., பேங்க் 857.20 -20.55
ஓ.என்.ஜி.சி., 279.90 3.55
டாடா ஸ்டீல் 198.79 -1.78
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் 469.60 11.55
நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)
சுஸ்லான் எனர்ஜி 39.99 -0.26
எஸ் பேங்க் 20.10 -0.13
எம்.எம்.டி.சி., லிட் 79.89 1.45
அசோக் லேலண்ட் 194.84 -8.20
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 70.00 -0.40
நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)
ஏஞ்சல் ஒன் 219.10 -5.58
என்.பி.சி.சி., (இந்தியா) 85.84 -1.01
ஐநாக்ஸ் விண்ட் 83.87 -2.45
பந்தன் பேங்க் 183.00 -2.03
இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் 121.20 -0.43
மற்ற சில பங்குகளின் விலை விபரம்
பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் 259.00 1.75
தி கர்நாடகா பேங்க் 216.89 3.30
ஆதித்யா பிர்லா சன்லைப் ஏ.எம்.சி., 925.10 32.55
சி.ஜி., பவர் 716.80 15.70
ஜூபிட்டர் வேகன்ஸ் 304.10 49.30
