இந்தியாவின் மதிப்பீட்டை குறைத்த 'மோர்கன் ஸ்டான்லி'

‘மோ ர்கன் ஸ்டான்லி’, இந் தியாவை ‘ஓவர் வெயிட்டேஜ்’ மதிப்பீட்டில் இருந்து ‘சராசரி’ நிலைக்கு குறைத்துள்ளது. இந்தியாவுடன் சேர்த்து ‘ஐக்கிய அரபு எமிரேட்ஸ்’ மதிப்பீட்டையும் குறைத்துள்ளது. அதேநேரம், தைவான் மற்றும் சவுதி அரேபியாவின் மதிப்பீட்டை உயர்த்தியுள்ளது.

மூன்று காரணங்கள்

 உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதமும்; இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40 சதவீதமும், ‘ஹார்முஸ் ஜலசந்தி’ வழித்தடம் வாயிலாக நடக்கிறது. அமெரிக்கா – – ஈரான் போர் காரணமாக இந்த வழித்தடம் பாதிக்கப்பட்டால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு கேள்விக்குறியாகும்

 இந்தியா தனது இயற்கை எரிவாயு, தேவைகளுக்கு கத்தாரை பெரிதும் நம்பியுள்ளது. போர் சூழலில், கத்தாரில் இருந்து வரும் காஸ் வினியோகம் தடைபட வாய்ப்புள்ளதால், இந்தியாவின் உற்பத்தித் துறை மற்றும் மின்சாரத் துறை பாதிக்கப்படலாம்

 இந்தியா போன்ற வளரும் நாடுகளை விட, தற்போது போர் சூழலில் பாதுகாப்பான இடங்களைத் தேடி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஓடுகின்றனர். இதனால் தான் கடந்த சில வாரங்களில் மட்டும் இந்தியாவிலிருந்து பெரும் முதலீடு வெளியேறியுள்ளது.

Source link