தமிழக அணி வெற்றி

புதுச்சேரி: ‘ஒன் டே’ டிராபி தொடரில் தமிழக அணி 9 ரன்னில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தியது.

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ‘ஒன் டே’ டிராபி எலைட் தொடர் நடத்தப்படுகிறது. நேற்று புதுச்சேரியில் நடந்த போட்டியில் தமிழகம், ஜார்க்கண்ட் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய தமிழக அணிக்கு கமலினி, சுபாஹரிணி ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்த போது சுபாஹரிணி (30) அவுட்டானார். கமலினி (65) அரைசதம் அடித்தார். ரினாஸ் தன் பங்கிற்கு 71 ரன் எடுத்தார். தமிழக அணி 50 ஓவரில் 255/3 ரன் எடுத்தது. கேப்டன் ரோஷினி (46), ஐஸ்வர்யா (22) அவுட்டாகாமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணிக்கு பிரியங்கா (54), குமாரி பாலக் (71) மட்டும் கைகொடுத்தனர். மற்றவர்கள் ஏமாற்ற, 50 ஓவரில் 246/8 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

Source link