கலபுராகி: கர்நாடகாவின் கலபுராகி நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது.
ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, ரஷ்யாவின் நெபிலி மோதினர். ஒரு மணி நேரம் 20 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் வைஷ்ணவி, 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் நெதர்லாந்தின் கிம்ப்ரெரேவை சந்திக்க உள்ளார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ரஷ்யாவின் பர்டினாவை 6-0, 6-2 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். இன்று நடக்கும் அரையிறுதியில் அன்கிதா, தாய்லாந்தின் நக்லோவை எதிர்கொள்கிறார்.
பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் அன்கிதா, வைஷ்ணவி ஜோடி, 7-6, 6-2 என, இந்தியாவின் சோனல், பெலா ஜோடியை வென்றது. மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சோஹா, ஆகான்ஷா ஜோடி, 6-7, 6-0, 10-5 என ஜப்பானின் ஒஜெகி, இந்தியாவின் ஷிவானி ஜோடியை சாய்த்தது.
இன்று நடக்கும் பைனலில் இந்தியாவின் அன்கிதா, வைஷ்ணவி-சோஹா, ஆகான்ஷா ஜோடி மோதுகின்றன.
