இலங்கை தமிழர் முகாமின் தலைவர் சரமாரியாக வெட்டி படுகொலை

திருவள்ளூர்: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமின் தலைவர் நேற்று, சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், 937 குடும்பங்களைச் சேர்ந்த 2,770 பேர் வசித்து வருகின்றனர்.

இவர்க ளின் முகாம் தலைவராக சிவகுமார் என்ற கண்ணன், 42 இருந்து வந்தார். இவரை, மர்ம கும்பல் ஒன்று நேற்று இரவு சரமாரியாக வெட்டியது. பலத்த வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்ததை உறு தி செய்தனர்.

இதனால் கொதிப் படைந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் 300க்கும் மேற் பட்டோர், மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

பதற்றமான சூழல் நிலவியதால், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்த போலீசார், கண்ணனின் உடலை பிரதே பரிசோதனைக்காக, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், முகாமை சேர்ந்த கும்பல் ஒன்று, முன் விரோதம் காரணமாக சிவகுமாரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

முகா மில் பதற்றமான சூழல் நிலவுவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொலை குறித்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Source link