ஈரானுடன் முழு பலத்துடன் போரை தொடருவோம்; சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம்: ஈரானுடன் முழு பலத்துடன் போரை தொடருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் விடுத்துள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சி சேனலுக்கு பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டி: இஸ்ரேலும், ஈரானும் மீண்டும் உண்மையான நண்பர்களாக மாறும். இதற்கான தருணம் நெருங்கி வருகிறது. ஈரானுடன் முழு பலத்துடன் போரை தொடருவோம். மோதலின் அடுத்த கட்டம் இன்னும் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தும். எங்கள் வெற்றி முழு உலகிற்கும் அணுசக்தி அச்சுறுத்தல்களை நீக்கும்.

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே அமைதியை கொண்டு வரும். அயதுல்லா கமேனியின் ஆட்சி முழு உலகிற்கும் ஆபத்தை ஏற்படுத்தியது என்பதை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள். ஈரான் 12 அண்டை நாடுகளை தாக்கியுள்ளது. நாங்கள் ஈரான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஆதரவாக இருப்போம்.

மோதல்கள் விரிவடைந்து வருவதால் பல நாடுகள் இப்போது இஸ்ரேலுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. பல நாடுகள் இப்போது ஒத்துழைப்புக்காக எங்களை அணுகி வருகின்றன. தனது நாடு இப்போது ஈரான் வான்வெளியை கிட்டத்தட்ட முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது.

ஈரான் மீதுள்ள வானத்தின் மீது எங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது. இஸ்ரேல் படைகள் ஈரான் ராணுவம் மற்றும் அவர்களது இலக்குகள் மீது தாக்குதல்களை விரிவுபடுத்தியது. இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

Source link