2026 டி20 உலககோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச்.8) பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் சாண்ட்னர், “அகமதாபாத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவதே எங்கள் நோக்கம்.
நாங்கள் அவர்களுக்கு பிடிக்காதவர்களாக இருந்தாலும் கூட அணியாக ஒன்றிணைந்து கோப்பையை வெல்வோம்” என்று கூறினார்.
இந்தக்கருத்துகள், 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னர் அதே மைதானத்தில் ஆஸ்திரேலியக் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியதைப் போலவே இருந்தன.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது சாண்ட்னரின் இந்தக் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், ” எல்லாரும் ஒரே வரியை சொன்னா எப்படி? ஏதாச்சும், புதுசா சொல்லுங்க” என சிரித்துக்கொண்டே பதில் அளித்திருக்கிறார்.
