கோல்கட்டா: நமது அண்டை நாடான மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மேற்கு வங்க தலைநகர்

கோல்கட்டா: நமது அண்டை நாடான மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

மியான்மரின் அக்யாப் என்ற இடத்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட அதிர்வானது வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா மற்றும் மேற்கு வங்கத்தின் தலைநகர் கோல்கட்டாவிலும் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

மியான்மரில் கடந்த 71 மணி நேரத்தில் நிலநடுக்கம் ஏற்படுவது இது 3வது முறையாகும். வங்கதேசத்தில் இரண்டாவது முறை ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Source link