இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: பெண்கள் பகலிரவு டெஸ்டில்

பெர்த்: பகலிரவு டெஸ்டில் இந்திய பெண்கள் அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஒரே ஒரு பகலிரவு டெஸ்டில் (‘பிங்க்பால்’) பங்கேற்றது. பெர்த்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 198, ஆஸ்திரேலியா 323 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 105/6 ரன் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் பிரதிகா ராவல் அரைசதம் கடந்தார். ஏழாவது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்த போது ஸ்னே ராணா (30) அவுட்டானார். பிரதிகா (63) ஓரளவு கைகொடுத்தார். இந்திய அணி 2வது இன்னிங்சில் 149 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது.

பின், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 25 ரன் மட்டும் தேவைப்பட்டது. காஷ்வீ வீசிய 5வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்த ஜார்ஜியா வெற்றியை உறுதி செய்தார். ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 28/0 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜார்ஜியா (16), லிட்ச்பீல்டு (11) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி விருதை ஆஸ்திரேலியாவின் அனாபெல் (129 ரன், 6 விக்.,) வென்றார்.

Source link