பீஜிங்: இறைச்சிக்காக அறுக்கப்பட்ட வாத்தின் வயிற்றில் இருந்து 1.62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம்

பீஜிங்: இறைச்சிக்காக அறுக்கப்பட்ட வாத்தின் வயிற்றில் இருந்து 1.62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் கண்டெடுக்கப்பட்டது.

நம் அண்டை நாடான சீனாவின் ஹுனான் மாகாணத்தின் லாங்குய் மாவட்டத்தைச் சேர்ந்த லியு என்பவர், கடந்த மாதம், தான் வளர்த்த வாத்தை இறைச்சிக்காக அறுத்தார். அப்போது, அதன் வயிற்றுக்குள் 10 கிராம் தங்க துகள்கள் இருப்பதை கண்டார். அவற்றை எடுத்து சோதனை செய்து பார்த்ததில், அது சுத்தமான தங்கம் என தெரிய வந்தது. இதன் மதிப்பு, 1.62 லட்சம் ரூபாய்.

இந்த வாத்துகள் ஒரு ஆற்றின் ஓரத்தில் மேய்ச்சலுக்காக விடப்பட்டவை. அப்பகுதியில் ஏற்கனவே தங்கச் சுரங்கங்கள் செயல்பட்டு வந்தன. அப்பகுதியில் உள்ள மண்ணை வாத்துக்கள் உண்ணும் போது, தங்கம் கலந்த சேற்றையும் சேர்த்து விழுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், வாத்தின் வயிற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கம் லியுவுக்கு சொந்தமா அல்லது சீன அரசுக்கு சொந்தமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source link