பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் லக்சயா சென் முன்னேறினார்.
பர்மிங்காமில், ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், கனடாவின் விக்டர் லாய் மோதினர். முதல் செட்டை 21-16 எனக் கைப்பற்றிய லக்சயா, இரண்டாவது செட்டை 18-21 என போராடி இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட லக்சயா 21-15 என வென்றார்.
ஒரு மணி நேரம், 37 நிமிடம் நீடித்த போட்டியில் லக்சயா சென் 21-16, 18-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 2வது முறையாக பைனலுக்கு முன்னேறினார். ஏற்கனவே 2022ல் பைனல் வரை சென்று, 2வது இடம் பிடித்திருந்தார்.
