புதுடில்லி: நடப்பு ரபி பருவத்தில், 3.03 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. பெரும்பாலான கோதுமை கொள்முதல் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களுக்குள் நடைபெறும்.
இதேபோல், நடப்பு பருவத்தில் நெல் கொள்முதல் 76 லட்சம் டன்னாகவும், சிறுதானியங்கள் கொள்முதல் 7.79 லட்சம் டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சாதகமான வானிலை மற்றும் அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதன் காரணமாக, இந்த ஆண்டு கோதுமை உற்பத்தி முந்தைய ஆண்டின் சாதனையான 11.80 கோடி டன்னை தாண்டி, 12 கோடி டன்னை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய உணவுக்கழகத்திடம் வரும் ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி 1.82 டன் கோதுமை கையிருப்பு இருக்கும் என்பதால், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய எவ்வித சிக்கலும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
