டாக்கா: வங்கதேசத்தில் தாக்குதல் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், கோவில் மீது குண்டு வீசப்பட்டதில், தலைமை

டாக்கா: வங்கதேசத்தில் தாக்குதல் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், கோவில் மீது குண்டு வீசப்பட்டதில், தலைமை அர்ச்சிர் படுகாயம் அடைந்தார்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சியின்போது, சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கொள்ளை, கொலை, பாலியல் வன்கொடுமை, சொத்துக்கள் அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறின.

இங்கு, கடந்த மாதம் நடந்த பொதுத் தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பி.என்.பி., கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், நேற்று முன்தினம் கூமில்லா மாவட்டத்தில் உள்ள ஒரு ஹிந்து கோவிலின் மாலை நேர பூஜையின் போது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், தலைமை அர்ச்சகர் கேசவ் சக்கரவர்த்தி படுகாயமடைந்தார். அங்கிருந்த பக்தர்கள் சிலரும் காயமடைந்தனர்.

Source link