நமது நிருபர்ஹிந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும் பழக்கம் கொண்ட கருணாஸ் பேச்சுக்கு இணையத்தில் கண்டனம்

நமது நிருபர்

ஹிந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும் பழக்கம் கொண்ட கருணாஸ் பேச்சுக்கு இணையத்தில் கண்டனம் வலுத்து வருகிறது.

சில வாரங்களுக்கு முன் பொது நிகழ்ச்சி ஒன்றில் கருணாஸ் பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது: நான் சொல்கிறேன், எதையும் சந்திக்க தயாராக சொல்கிறேன். ஹிந்து என்று ஒரு மதமே கிடையாது. பிறகு என்ன ஹிந்து, நான் யார்? நான் சைவ மதத்தை சார்ந்தவன். நான் சிவனையும், முருகனையும் தொன்று தொட்டு ஆண்டு காலமாக வணங்கி வந்தவன். இந்தியாவில் எத்தனையோ மதங்கள் இருக்கிறது.

புத்த மதம் இருக்கிறது. சைவம் இருக்கிறது. சமணம் இருக்கிறது. வைணவம் இருக்கிறது. இன்னும் சொல்லி கொண்டே போகலாம். இஸ்லாம் இருக்கிறது. கிறிஸ்தவம் இருக்கிறது. இப்படி எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது எங்கு இருந்து வந்தது ஹிந்து. வெள்ளைக்காரர்கள் நமது இந்தியாவை ஆட்சி செய்த போது, அரசு நிர்வாகத்திற்காக பல மொழிகள் பேசக்கூடிய நாடாக இது இருக்கிறது. பல மதங்களை வழிப்படக்கூடிய மக்களாக இருக்கிறீர்கள்.

ஒவ்வொரு மதமாக பிரித்து நிர்வாகம் செய்வதற்காக இஸ்லாமியர்களை ஒரு மதமாகவும், கிறிஸ்தவர்களை ஒரு மதமாகவும், அடுத்த பல மதங்கள் இருந்த நிலையில் நிர்வாகம் செய்வதற்காக வைத்த பொது பெயர் ஹிந்து அவ்வளவுதான், அது மதமே கிடையாது. ஆனால் ஹிந்து என்பது வேறு, நான் சிவனை கும்பிடுகிறேன். நீங்கள் பெருமாளை கும்பிடுகிறீர்கள்.

நீங்களும், நானும் ஹிந்து. வைத்துக்கொள்ளலாம் தப்பு இல்லை. ஆனால் ஹிந்து என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறோம். இத்தனை மதங்கள் சேர்ந்தது ஹிந்து. இவ்வாறு அந்த வீடியோவில் கருணாஸ் கூறியுள்ளார். ஹிந்து மதத்தை இழிவு படுத்திய கருணாசுக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Source link