கோழிக்கோடு: ஒரு ரூபாய்க்கு ஷூ வழங்கப்படும் என்று வெளியிடப்பட்ட விளம்பரத்தை பார்த்து, கேரளாவில் கடை முன்பு

கோழிக்கோடு: ஒரு ரூபாய்க்கு ஷூ வழங்கப்படும் என்று வெளியிடப்பட்ட விளம்பரத்தை பார்த்து, கேரளாவில் கடை முன்பு நூற்றுக்கணக்கானர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் காலணி கடை ஒன்று விளம்பர நோக்கில் முதலில் வரும் 100 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஷூ வழங்குவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பை பார்த்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், நேற்று (மார்ச் 8) அதிகாலை 2 மணியில் இருந்தே கடை முன்பு குவியத் தொடங்கினர். வயநாடு போன்ற பிற மாவட்டங்களில் இருந்து மனைவி, குழந்தைகளுடன் திரண்டனர்.

இதனால், அப்பகுதியில் கூட்டநெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமையை உணர்ந்த போலீசார், அவர்களை கலைந்து போகக் கூறினர். ஆனால், அதனை கேட்க மறுத்தனர். இதையடுத்து, லேசான தடியடி நடத்தி போலீசார் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.

கூட்டத்தை கூட்டி போக்குவரத்து நெரிசல் மற்றும் அசாதாரண சூழலை ஏற்படுத்திய கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link