ஜெருசலேம்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தை பின்பற்றி இஸ்ரேலில்

ஜெருசலேம்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தை பின்பற்றி இஸ்ரேலில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, இயற்கையை பாதுகாக்கும் வகையில் தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பிற நாடுகளிலும் இந்த திட்டம் பெரும் வரவேற்பு பெற்றது.

அந்த வகையில், மேற்காசிய நாடான இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள மோஷாவ் நெவாடிம் என்ற இடத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ‘து பிஷ்வாட்’ என்று அழைக்கப்படும் யூதர்கள் கொண்டாடும் மரங்களின் புத்தாண்டு பண்டிகையையொட்டி, அங்கு 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்திய துாதரகமும், ‘கெரென் கயமெட் லெஇஸ்ரேல்’ என்ற இஸ்ரேல் வன அமைப்பும் இணைந்து இந்த மர நடுவிழாவை நடத்தின.

Source link