கும்பகோணம்: தவெகவுடன் பாஜ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பது வதந்தி என்று தமிழக பாஜ தலைவர் நயினார்

கும்பகோணம்: தவெகவுடன் பாஜ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பது வதந்தி என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

திருச்சியில் பாஜ மாநில மாநாடு மார்ச் 11ல் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;

தவெகவுடன் பாஜ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுவது ஒரு வதந்தி… வதந்தி. தவெகவில் நாளை வேட்பாளர்கள் நேர்காணல் நடக்கும் நிலையில் சிபிஐ சம்மனுக்கும், எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிகள் பங்கீடு குறித்து இன்னமும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் போது நான் சொல்கிறேன்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.

Source link