புதிய பயிற்சியாளர் கிறிஸ்டன்: இலங்கை அணிக்கு…

கொழும்பு: இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமனம்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா 56, இருந்தார். சமீபத்திய ‘டி-20’ உலக கோப்பை தொடரில் இலங்கை அணி ‘சூப்பர்-8’ சுற்றோடு வெளியேறியது. இதனையடுத்து பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜெயசூர்யா விலகினார்.

அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில், ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) தொடர் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக புதிய தலைமை பயிற்சியாளராக, முன்னாள் தென் ஆப்ரிக்க வீரரும், முன்னாள் இந்திய பயிற்சியாளருமான கேரி கிறிஸ்டனை 58, இலங்கை கிரிக்கெட் போர்டு நியமித்தது. இவர், இரண்டு ஆண்டுகளுக்கு (2028, ஏப். 14 வரை) இப்பதவியில் இருப்பார்.

தென் ஆப்ரிக்க அணிக்காக (1993-2004) 101 டெஸ்ட் (7289 ரன், 21 சதம்), 185 ஒருநாள் (6798 ரன், 13 சதம்) போட்டிகளில் விளையாடிய கிறிஸ்டன், இந்தியா (2008-2011), தென் ஆப்ரிக்கா (2011-13) அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருந்தார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி, 2011ல் உலக கோப்பை (50 ஓவர்) வென்றது. தென் ஆப்ரிக்க அணி மூன்று வித போட்டியிலும் ‘நம்பர்-1’ அணியாக வலம் வந்தது. சமீபத்திய ‘டி-20’ உலக கோப்பையில் நமீபியா அணியின் ஆலோசகராக செயல்பட்ட கிறிஸ்டன், வரும் ஏப். 15ல் இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார்.

Source link