பங்கஜ் அத்வானி அபாரம்

தோகா: ஆசிய ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறினார் பங்கஜ் அத்வானி.

கத்தாரின் தோகாவில் ஆசிய ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் பங்கஜ் அத்வானி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதன் லீக் சுற்றில் இரு போட்டியில் வென்ற பங்கஜ் அத்வானி, ‘நாக் அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றார். காலிறுதியில் கத்தார் வீரர் அகமது செய்ப்பை 4-1 என வீழ்த்தினார்.

அடுத்து நடந்த அரையிறுதியில் பங்கஜ் அத்வானி, ஈரானின் ஷாஹின் சப்ஜி மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பங்கஜ் அத்வானி 4-0 என வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

பெண்கள் பிரிவில் இந்தியாவின் இஷிகா, ஸ்நேந்த்ரா, அன்யா படேல், தங்களது லீக் போட்டியில் தோல்வியடைந்தனர். 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவு லீக் சுற்றில் இந்தியாவின் ஆரவ் சச்சின், 3-0 என ஆப்கானிஸ்தானின் முர்டசா நுாரியை வென்றார். ராகுல் வில்லியம்ஸ் 0-3 என சீனாவின் காவோ ஜெயிடம் வீழ்ந்தார்.

Source link