டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு அறிவித்தது பிசிசிஐ

நமது நிருபர்

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசுத்தொகை அறிவித்தது பிசிசிஐ.

இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து இந்திய அணி வெற்றி பெற்றது. உலக கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற முதல் அணி என்ற சரித்திர சாதனையை இந்தியா படைத்தது. இந்திய அணி வெற்றிக்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் இன்று (மார்ச் 10) டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்காக வீரர்கள் உள்ளிட்டோரை மீண்டும் ஒருமுறை வாழ்த்துவதோடு, எதிர்காலத்தில் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source link