மணிப்பூரின் முதல்வராகிறார் பா.ஜ.,வின் யும்னம் கெம்சந்த் சிங்

புதுடில்லி: ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில், பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக, யும்னம் கெம்சந்த் சிங், 62, தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் இவர் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முன்னாள் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பா.ஜ., ஆட்சியின் போது கூகி மற்றும் மெய்டி பழங்குடியினர் இடையே கலவரம் வெடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இடஒதுக்கீடு தொடர்பாக எழுந்த இந்த கலவரத்தை அடுத்து அப்போதைய முதல்வர் பைரேன் சிங் பதவி விலகினார். இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது; சட்டசபை முடக்கப்பட்டது.

ஜனாதிபதி ஆட்சி, வரும் 12ல் முடிவுக்கு வருகிறது. இதை தொடர்ந்து, மணிப்பூர் பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். இவர், விரைவில் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link