நமது டில்லி நிருபர் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள

நமது டில்லி நிருபர்

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடந்து வருகிறது. அவையை மூத்த எம்பி ஜெகதாம்பிகா பால் நடத்தி வருகிறார்.

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, சபையில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, காங்., – தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, ‘இண்டி’ கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இதில், 118 எம்.பி.,க் கள் கையெழுத்திட்டு இருந்தனர். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நேற்று முதல் துவங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் லோக்சபாவில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவையை மூத்த எம்பி ஜெகதாம்பிகா பால் நடத்தி வருகிறார். விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.பி., வேணுகோபால், ”லோக்சபா துணை சபாநாயகரை 11 ஆண்டுகளாக மத்திய அரசு நியமிக்காமல் இருக்கிறது,” என குற்றம் சாட்டினார்.

”சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் கோரிக்கைகளை முன் வைப்பதற்கு அனுமதி மறுக்கிறார்” என எதிர்க்கட்சி எம்பிக்கள் தெரிவித்தனர். பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு அவையில் தனிப்பெரும்பான்மை உள்ளதால், இத்தீர்மானம் தோற்கடிக்கப்படுவது உறுதி என எம்.பி.,க்கள் தெரிவித்தனர்.

Source link