பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நாளை மார்ச் 11-ம் நாள் புதன்கிழமை தொடங்குகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 4,219 மையங்களில் தேர்வு எழுதும் 9.09 லட்சம் மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் இத்தேர்வில் வெற்றி பெறவும், சாதனை படைக்கவும் வேண்டும் என்பது தான் எனது விருப்பம் ஆகும்.
மேல்நிலை வகுப்பில் எந்தப் பாடத்தைத் தேர்வு செய்யலாம் என்பதைத் தீர்மானிப்பவை 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் தான். தங்களின் வாழ்க்கையில் இந்தத் தேர்வுகள் மிகவும் முக்கியமானவை என்பதைக் கருத்தில்கொண்டு மாணவச் செல்வங்கள் எந்த பதட்டமும், பரபரப்பும் இல்லாமல் கவனமாக படித்து பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
