தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்தை தொடங்கி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என, தீயாக இருக்கிறது தேர்தல் களம். அதன் ஒரு பகுதியாக இன்று தவெக தலைவர் விஜய், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த நிர்வாகிகளை நேரில் அழைத்து நேர்காணல் நடத்தினார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார், “தலைவர் விஜய் விருப்ப மனு கொடுத்த முக்கிய நிர்வாகிகள சந்தித்து முதற்கட்ட நேர்காணல் நடத்தி முடித்திருக்கிறார். தொடர்ந்து நேர்காணல் நடைபெறும். நாங்கள் பா.ஜ.க கூட்டணியில் இணையப் போவதாக யூகங்கள் கிளம்புகிறது. யூகங்களின் அடிப்படையில் எழுப்பப்படும் எந்தக் கேள்விக்கும் நாங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை.
ஏதாவது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்தால், அது கட்சித் தலைமையால் முறைப்படி அறிவிக்கப்படும். யூகங்களுக்குக் கருத்துச் சொல்லி நேரத்தை வீணடிக்க நாங்கள் தயாராக இல்லை. ஏற்கெனவே இரண்டு முறை டெல்லியில் சிபிஐ முன் ஆஜராகி அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்டுவிட்டன. தற்போது தலைவருக்குப் பல பணிகள் இருப்பதால், விசாரணையைச் சென்னைக்கு மாற்றவோ அல்லது வேறு தேதி வழங்கவோ கோரியிருந்தோம்.
