சென்னை: டிஜிட்டல் மோசடி மூலம் கிடைத்த ரூ.100 கோடியை கிரிப்டோகரன்சியாக மாற்றியதாக போலீஸ்காரர் உள்பட 7 பேரை சென்னை

சென்னை: டிஜிட்டல் மோசடி மூலம் கிடைத்த ரூ.100 கோடியை கிரிப்டோகரன்சியாக மாற்றியதாக போலீஸ்காரர் உள்பட 7 பேரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

சென்னையில் 2025ம் ஆண்டு ஆன்லைன் மோசடியில் ஏராளமான பணத்தை இழந்ததாக சிலர் புகார் அளித்து இருந்தனர். அதன் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ராமநாதபுரம் புல்லங்குடியை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சேர்ந்த காவலர் பிரதீப், போகலூரை சேர்ந்த அப்ரின், சேது பாண்டியன், சல்மான்கான், சத்திரக்குடியைச் சேர்ந்த தவமுருகன், முகேஷ்வரன், பரமக்குடி ஆசிக் சமூதின் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2025 மற்றும் 2026ம் ஆண்டுகளில் மோசடி செய்த 100 கோடி ரூபாயை கிரிப்டோகரன்சியாக மாற்றி உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் வைத்திருந்த 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்கு புத்தகங்கள், ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள், ஏராளமான சொத்து ஆவணங்களும் சிக்கின.

Source link