குவஹாத்தி: அசாமில் ஆளும் பா.ஜ., அரசு, 40 லட்சம் பெண்களுக்கு தலா, 9,000 ரூபாயை வங்கி கணக்கில் நேற்று செலுத்தி அசத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ‘ஒருனோடோய்’ என்ற வறுமை ஒழிப்பு திட்டம் 2020 முதல் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் குடும்பத்தில் ஒரு தகுதியான பெண்ணுக்கு மாதம் தோறும் தலா 1,250 ரூபாயை அரசு வழங்குகிறது.
ஜனவரி முதல் நான்கு மாதத்திற்கு மொத்தம், 5,000 உடன், அசாம் புத்தாண்டான போகா பிகுவை சிறப்பாக கொண்டாடும் வகையில், தலா, 4,000 என மொத்தம் 9000 ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் சர்மா தெரிவித்திருந்தார்.
அதன்படி, ‘ஒருனோடோய்’ திட்டத்தின் கீழ் 40 லட்சம் பெண்களுக்கு, தலா 9,000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது.
