குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் என டில்லி ஜல் வாரியம் அறிவிப்பு

புதுடில்லி, வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, டில்லியின் பல பகுதிகளில் நேற்றும், இன்றும் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

டில்லி ஜல் வாரியம் எனும், டில்லி நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வட மேற்கு மற்றும் வட கிழக்கு மாவட்டங்களில் பல நீரேற்று நிலையங்கள் உள்ளன. பல இடங்களில் உள்ள சுரங்க நீர் தேக்கங்களிலும், தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

அதையடுத்து, சாஸ்திரி பார்க், சீலாம்புர், கிரேட்டர் கைலாஷ், கிரி நகர், ஜல் சதன், வசந்த்குஞ்ச், சட்டார்புர், ஆர்.கே.நகர் ஆகிய பகுதிகளில், நேற்றும், இன்றும், குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குடிநீர் தேவைப்படுவோர், ‘1918’ என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டால், அவர்களின் வீடு தேடி சென்று, குடிநீர் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Source link