புதுடில்லி, திபெத் தேசிய கிளர்ச்சி நாளை முன்னிட்டு, சீன துாதரகம் முன் திரண்ட திபெத்தியர்கள், 24 பேர் சுற்றி

புதுடில்லி, திபெத் தேசிய கிளர்ச்சி நாளை முன்னிட்டு, சீன துாதரகம் முன் திரண்ட திபெத்தியர்கள், 24 பேர் சுற்றி வளைக்கப்பட்டனர்.

திபெத் இளைஞர் காங்கிரஸ் சார்பில், சீன துாதரகம் முன் நேற்று, திபெத் தேசிய கிளர்ச்சி நாளின், 67வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கலாசாரம் இதையடுத்து, சீன துாதரகம் அருகே ஏராளமான திபெத்தியர்கள் குவிந்தனர். அவர்கள், சீன அரசு மற்றும் ராணுவத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.

இதுகுறித்து, திபெத் புத்த மதத்தினர் கூறியதாவது:

கடந்த, 67 ஆண்டுகளாக, திபெத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டும்; மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்; அந்த பகுதியில் விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என போராடி வருகிறோம்.

எங்களுக்கு என தனியான கலாசாரம் உள்ளது. அதை சீன அரசு மதிக்க வேண்டும். சம உரிமை கேட்டு, திபெத்திற்கு வெளியே இருந்தவாறு, நாங்கள், 67 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுற்றிவளைப்பு சீன துாதரகம் முன், அனுமதியின்றி கூடியது; சீன அரசுக்கு எதிராக கோஷமிட்டது போன்ற குற்றங்களுக்காக, 24 திபெத்தியர்கள் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களின் பெயர், மு கவரி சேகரிக்கப்பட்டு, இன்று விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link