டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கும் செயலை ஈரான் தொடர்ந்தால், தற்போது நடக்கும் தாக்குதலைக் காட்டிலும்

டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கும் செயலை ஈரான் தொடர்ந்தால், தற்போது நடக்கும் தாக்குதலைக் காட்டிலும் இருபது மடங்கு அதிகமான தாக்குதலை ஈரான் சந்தி க்க வேண்டியிருக்கும் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.

இதற்கு ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி லாரிஜானி, சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:

தியாக பண்பு கொண்ட ஈரானிய மக்கள் உங்கள் வெற்று மிரட்டலுக்கு அஞ்ச மாட்டர். உங்களை விட பெரிய சக்திகளே ஈரானை அழிக்க நினைத்து தோற்றுப் போயின. ஈரானை அழிப்பதாக நினைத்து, காணாமல் போகப்போவது நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link