புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து நிலைமையை மத்திய அரசு மிக உன்னிப்பாக கண்காணித்து

புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து நிலைமையை மத்திய அரசு மிக உன்னிப்பாக கண்காணித்து வருவதால் அச்சம் அடைய தேவையில்லை என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடுத்துள்ளதால், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலமையை சமாளிக்கு வீட்டு உபயோக சிலிண்டர், 21 நாட்கள் என்பதை 25 நாட்களுக்கு பிறகே பதிவு செய்யவும், வணிக சிலிண்டர் வினியோகத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பதுக்கலை தடுக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதன்படி, சமையல் காஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரத்துள்ளது.

இந்நிலையில் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: நாடு முழுவதும் எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. யாரும் அச்சம் அடைய தேவையில்லை. நிலைமையை அரசு உன்னிப்பாக கண்காணிக்கிறது.

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்களால் உலகளாவிய எரிசக்தி துறைகளில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், இந்தியாவில் எந்த எரிபொருள் பற்றாக்குறையையும் எதிர்கொள்ளவில்லை. எரிநொருள் விநியோகத்தை உறுதி செய்ய அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.

Source link