ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பொது இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் ஸ்டிக்கர்களை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பொது இடங்களில் இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் ஸ்டிக்கர்களை ஒட்டிய இரு பிரிட்டன் சுற்றுலாப் பயணிகளின் விசா உடனடியாக ரத்து செய்யப்பட்டு, இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த லூயிஸ் கேப்ரியல் டி மற்றும் அவரது தோழி அனுஷி எம்மா கிறிஸ்டின் ஆகியோர் சுற்றுலா விசாவில் இந்தியா வந்திருந்தனர். ராஜஸ்தானில் பல்வேறு பொது இடங்களுக்கு சென்ற அவர்கள், இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர்.

இது குறித்து உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிசிடிவி காட்சிகள் மற்றும் உள்ளூர் மக்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் அடையாளம் காணப்பட்டனர். அதன்பிறகு, போலீசாரின் உதவியுடன் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டன.

சுற்றுலா விசாவில் இந்தியாவுக்குள் நுழைந்து அரசியல் நடவடிக்கைகளை ஈடுபட்டது விதியை மீறிய செயலாகும். எனவே, இருவரின் விசாக்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான நோட்டீஸை அதிகாரிகள் அளித்தனர்.

பிரதமர் மோடி இந்த மாதம் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் அண்மையில் கூறியிருந்தார். இந்த சூழலில் இஸ்ரேலுக்கு எதிராக வெளிநாட்டவர்கள் ஸ்டிக்கர் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link