‘திமுக கூட்டணியில் சில விஷயங்களை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறோம்!’ – மதிமுகவின் துரை வைகோ சரண்டர்? |MDMK Ready to Make Concessions in DMK Alliance”: Durai Vaiko’s Big Statement

அவர் பேசியதாவது, ‘கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவில் நான் இல்லை. ஆனால், எங்கள் தரப்பினர் மதிமுகவின் விருப்பத்தை திமுகவிடம் தெரியப்படுத்தயிருக்கிறார்கள். திமுக அவர்களின் சூழ்நிலையை எங்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். எங்களின் கூட்டணி ஏற்கனவே வலுவாக இருக்கிறது. இப்போது மேலும் சிலர் இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள்.

துரை வைகோ

துரை வைகோ

மதவாத சக்திகளுக்கு எதிரான பொதுவான கருத்தோடு எல்லாரும் இணைந்திருக்கிறோம். கூட்டணியில் எங்களால் பிரச்னை ஏற்படாது. இயக்கத்தின் நலனை விட தமிழகத்தின் நலனை முக்கியம். சில விஷயங்களை விட்டுக் கொடுத்துதான் போக வேண்டும். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் தாமதமும் இல்லை’ என்றார்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோ சம்மதம் தெரிவித்தாலும், துரை வைகோ அதனை விரும்பவில்லை என்றும், கட்சிக்கு அங்கீகாரம் வேண்டும் என்றால் தனிச்சின்னத்தின் தான் நிற்க வேண்டும் எனவும் துரை வைகோ வலியுறுத்தி வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், துரை வைகோவின் தற்போதைய கருத்து, மதிமுக, வரும் தேர்தலில் திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரி்விப்பதாக உள்ளது.

Source link