நமது நிருபர்தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 04) நீங்கள்

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 04) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில், பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக, யும்னம் கெம்சந்த் சிங், 62, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று முதல்வராக பதவியேற்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, பாஜ தலைமையில் புதிய அரசு அமைய உள்ளது.

* மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சுப்ரீம்கோர்ட்டில் நேரில் ஆஜராக வாய்ப்பு உள்ளது.

* விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் என் கனவு என் எதிர்காலம் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அவர் 13,879 பயனாளிகளுக்கு ரூ.43.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

* சென்னை ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

* பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்றைய விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

* கடந்த 3 தினங்களாக சரிந்து வந்த தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 2,560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கம் விலையில் பெரிய மாற்றம் வருமா என வணிகர்கள் எதிர்பார்ப்பு

* இந்தியா, இலங்கையில் ‘டி-20’ உலக கோப்பை தொடர் (பிப். 7-மார்ச் 8) நடக்க உள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியனாக’ களமிறங்கும் இந்திய அணி, மீண்டும் உலக கோப்பை வென்று வரலாறு படைக்கும் உறுதியுடன் உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு நவி மும்பையில் இந்தியா- தென் ஆப்ரிக்கா இடையே பயிற்சி போட்டி நடைபெறுகிறது.

* இன்று மதியம் 1 மணிக்கு நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் (19 வயது) இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. போட்டி நடக்கும் இடம்: ஹராரே.

Source link