திருச்சி: திருச்சியில் இன்று, 5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.கேரளா

திருச்சி: திருச்சியில் இன்று, 5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

கேரளா மாநிலத்தில் இருந்து, பிரதமர் மோடி, இன்று மாலை 4 மணியளவில், திருச்சி வந்தார். தமிழர் பாரம்பரியமான வேஷ்டி, சட்டை அணிந்து வந்த அவருக்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து பஞ்சப்பூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.

அங்கு நடந்த அரசு நிகழ்ச்சியில், 5,650 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். புதிய திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டினார்.

நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், 3,680 கோடி ரூபாய் முதலீட்டில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்திற்கு, பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

சென்னை அடுத்த மணலியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின், 1,490 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள, மசகு எண்ணெய் கலவை ஆலையை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 370 கி.மீ., நீளமுள்ள, 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைத்தார்.

தேசிய நெடுஞ்சாலை 81ல், கங்கைகொண்ட சோழபுரம் அருகே, பசுமை புறவழிச்சாலை அமைக்க, அடிக்கல் நாட்டினார்.

இரண்டு அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், இரு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணியர் ரயில் சேவையையும், மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் மோடிக்கு, எல்.முருகன் நினைவுப்பரிசு வழங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு சால்வை அணிவித்தார். பொருநை அருங்காடசியகம் நினைவு சின்னத்தை பிரசாக வழங்கினார்

பின், மாலை, 6:30 மணிக்கு திருச்சியில் தேசிய ஜனநாயகம் கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் பேசுகிறார்.

Source link