சென்னை: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் சமூக நீதியைப் பாதிக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு காணக் காலம்தோறும் குரலெழுப்பி வருவது திமுக தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை;
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா: தமிழ்நாட்டின் சமூக நீதிப் பார்வையை இந்தியா முழுவதும் கொண்டு செல்லுங்கள்.
குடிமைப்பணித் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதி பெற்றுத் தந்தார் கருணாநிதி. யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் சமூக நீதியைப் பாதிக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு காணக் காலம்தோறும் குரலெழுப்பி வருவதும் நாம்தான்.
தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறையத் தொடங்குவதை உணர்ந்து, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் தரப் பயிற்சிகள், ஊக்கத்தொகைகள் என நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் பயனாக நமது மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை தொடர்ந்து ஏற்றம் காண்பது கண்டு மகிழ்கிறேன்.
தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு தேர்வாகியுள்ள 60 பேருக்கும் என் பாராட்டுகள். இந்த எண்ணிக்கை மேலும் உயரும், உயர வைப்பேன், உங்களைப் போல இன்னும் பலரை உயர உயரப் பறக்க வைப்பேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறி உள்ளார்.
