'சீலியோ' மின் ஸ்கூட்டர் கோவையில் தொழிற்சாலை

கோவை:மின்சார ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் சீலியோ இ – மொபிலிட்டி நிறுவனம், தென் இந்திய சந்தைக்காக, கோவையில் உற்பத்தி ஆலையை அமைக்கிறது. இது, இந்நிறுவனத்தின் நான்காவது ஆலை ஆகும்.

இந்த ஆலை, 39,000 சதுர அடி நிலப்பரப்பில் அமைக்கப்படுவதாகவும், வரும் ஜூலையில் உற்பத்தி துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மின்சார ஸ்கூட்டர்கள் அசெம்பிளி, கிடங்கு மற்றும் இதர தளவாட செயல்பாடுகளை மேற்கொள்ள பயன்படுகிறது.

ஹரியானாவின் லட்வா மற்றும் பட்டான் பகுதிகளிலும், ஒடிசாவின் கட்டாக் பகுதியிலும், தற்போது மூன்று ஆலைகள் இயங்கி வருகின்றன. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், லாபம் 11.87 கோடி ரூபாயும், வருவாய், 134.78 கோடி ரூபாயும் இந்நிறுவனம் ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்த இந்நிறுவனம், 78.34 கோடி ரூபாய் நிதி திரட்டியது குறிப்பிடத்தக்கது.

Source link