சுவிஸ் பாட்மின்டன்: சிந்து விலகல்

பசல்: சுவிஸ் ஓபன் பாட்மின்டனில் இருந்து இந்தியாவின் சிந்து விலகினார்.

சுவிட்சர்லாந்தின் பசல் நகரில், சுவிஸ் ஓபன் ‘சூப்பர் 300’ பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இதன் பெண்கள் ஒற்றையரில், இந்தியாவின் சிந்து பங்கேற்க இருந்தார். சமீபத்தில் முடிந்த ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடரில் பங்கேற்பதற்காக, துபாய் வழியாக பர்மிங்காம் செல்ல திட்டமிட்டிருந்தார் சிந்து.

ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய போர் பதற்றம் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டதால் ஆல் இங்கிலாந்து தொடரில் விளையாட முடியாமல் போனது. துபாயில் மாட்டிக்கொண்ட இவர், மூன்று நாட்களுக்கு பின் தாயகம் திரும்பினார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வரும் சிந்து, சுவிஸ் ஓபனில் இருந்து விலகினார். அடுத்த மாதம் நடக்கவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் ஒற்றையரில் உன்னதி ஹூடா, மாளவிகா பன்சோத் களமிறங்குகின்றனர். ஆண்கள் ஒற்றையரில் ஸ்ரீகாந்த், பிரனாய், தருண், ஆயுஷ் ஷெட்டி, கிரண் ஜார்ஜ் பங்கேற்கின்றனர். ஆண்கள் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஷெட்டி, பெண்கள் இரட்டையரில் திரிசா-காயத்ரி கோபிசந்த், கலப்பு இரட்டையரில் துருவ் கபிலா-தனிஷா ஜோடி களமிறங்குகின்றன.

Source link