புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கம் செய்வதற்கான தீர்மான நோட்டீசில்,

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கம் செய்வதற்கான தீர்மான நோட்டீசில், ‘இண்டி’ கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் செயல்படுவதாகவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தகுதிவாய்ந்த ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், காங்., – தி.மு.க., – சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, ‘இண்டி’ கூட்டணி குற்றஞ்சாட்டி உள்ளது.

அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசும் குரல் கொடுத்தது.

இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மான நோட்டீசில், இண்டி கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நோட்டீசை லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும் அளிக்க அக்கூட்டணி முடிவு செய்துள்ளது.

லோக்சபாவில், ஞானேஷ் குமார் பதவி நீக்க தீர்மான நோட்டீசில், 120 எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில், 60 எம்.பி.,க்களும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நோட்டீஸ்களை இரு சபைகளிலும் விரைவில் வழங்க, இண்டி கூட்டணி முடிவு செய்துள்ளது.

நம் வரலாற்றிலேயே தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக பதவி நீக்க நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது இதுவே முதன்முறை. இரு சபைகளிலும் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்க நோட்டீஸ் தோற்கடிக்கப்படுவது உறுதி.

Source link