டெஹ்ரான்: மேற்காசியாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் நுாற்றுக்கணக்கான எண்ணெய் கப்பல்கள் சிக்கியுள்ளன.
கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும் என்று, அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிரிஸ் ரைட் ஒரு பதிவில், ‘அமெரிக்க கடற்படை, ஒரு எண்ணெய் டேங்கரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வெற்றிகரமாக அழைத்து சென்றது’ என்று நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
ஆனால் இந்த பதிவு, சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டது. வெள்ளை மாளிகை உடனடியாக தலையிட்டு, ‘அமெரிக்க கடற்படை எந்த எண்ணெய் டேங்கரையும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அழைத்து செல்லவில்லை’ என்று தெளிவு படுத்தி உள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, அமெரிக்காவின் இந்த உரிமை கோரலை கடுமையாக மறுத்தது.
‘எந்த அமெரிக்க கடற்படை கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை நெருங்கத் துணியவில்லை. இது அப்பட்டமான பொய்’ என்று அந்தப் படை தெரிவித்துள்ளது.
