கிருஷ்ணகிரி: `நகராட்சியில் ரூ.2 கோடி ஊழல்’- முன்னாள் தலைவர் புகாரால் பரபரப்பு!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நகராட்சித் தலைவர் ஃபரிதா நவாப், “நான் கிருஷ்ணகிரி 1 வது வார்டு கவுன்சிலராக உள்ளேன். கடந்த 09.02.2026 அன்று நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நடைபெறுவதாக 08.02.2026 அன்று தகவல் தெரிவித்தனர். விதிப்படி கூட்டம் கூட்ட ஒரு வாரத்திற்கு முன்பு அழைப்பு கடிதம் அனுப்ப வேண்டும், ஆனால் ஒரு நாள் முன்னதாகத்தான் தெரிவித்தனர்.

ஃபரிதா நவாப்

ஃபரிதா நவாப்

கூட்டத்தில் வைக்கவுள்ள பணிகளுக்கான தீர்மானங்களை இணைத்து அனுப்பியிருந்தனர். 1 முதல் 78 வரையில் இருந்த தீர்மானங்களின் எண்களில் பல ஒன்றுக்கு மேல் இருமுறை, மூன்றுமுறை இடம்பெற்றிருந்தது.

ஊழலுக்கு உதவும் வகையில் பணிக்கான தீர்மான எண்கள் பல இடங்களில் இரண்டு முறை குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஒரே பணிக்கு வெவ்வேறு தொகைகளுடன், ஒரே தீர்மானத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும மாறி மாறி குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் கிருஷ்ணகிரி மக்கள் நகராட்சிக்கு செலுத்தும் வரிப்பணம் ரூ 2 கோடியே 4 லட்சம் முறைகேடாக கையாடல் செய்யப்பட்டுள்ளது.

Source link