அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் முடிவுக்கு வர வேண்டுமா: 3 நிபந்தனை விதிக்கிறது ஈரான்

டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான்மூன்று நிபந்தனைகளை முன் வைத்துள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போர், இஸ்ரேல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் 3 நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரித்தல், இழப்பீடுகளை செலுத்துதல் மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிரான உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள். போரை முடிவுக்கு கொண்டு வர இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்காசியாவில் நிலவி வரும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு இதுவே ஒரே வழி. ரஷ்யா மற்றும் பாகிஸ்தானின் தலைவர்களுடன் பேசியபோது, ​​பிராந்தியத்தில் அமைதிக்கான ஈரானின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஈரான் அதிபர் கூறியுள்ளார்.

அண்டை நாடுகளைத் தாக்கக்கூடாது என்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறி, ஈரான் குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் புதிய தாக்குதல்களுடன் தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது. ஈரான் அதிபர் நிபந்தனைகளை விதித்த பிறகும், ஈரான் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தொடர்ந்து தாக்கியது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்தன. போர் இரண்டு வாரங்களை தொடவிருக்கும் நிலையில் கூட, பதற்றம் தணிவதற்கான எந்த அறிகுறியும் இல்லாத சூழல் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link