சுவாச நோய்களில் ஆசியாவிலேயே முதலிடம்; இந்தியாவின் நிலைக்கு என்ன காரணம்?!

ஆசிய நாடுகளிலேயே நாள்பட்ட சுவாச நோய்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடு, இந்தியா – லான்செட் ஆய்வு

சுவாச நோய்கள்

ஆசிய நாடுகளிலேயே நாள்பட்ட சுவாச நோய்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடு, இந்தியா – இதை லான்செட் மருத்துவ இதழில் வெளியான புதிய ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வு “குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ், 2023′ (Global Burden of Disease) என்ற உலகளாவிய சுகாதார தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ளது.

காற்றுதான் காரணமா?

இந்தியாவில் இந்த நோய்கள் அதிகமாக இருப்பதற்கான காரணிகளில் மக்கள் தொகை, மாசு போன்றவை இருந்தாலும், இதற்கு மிக முக்கிய காரணம், ‘காற்று மாசுபாடு’.

இந்தக் காற்று மாசுபாடும்…

> வெளியில் உள்ள துகள் மாசுக்கள்,

> வீடுகளில் உள்ள திட எரிபொருள்கள், அதாவது மரம், விறகு, நிலக்கரி ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புகைகளால் ஏற்படுகின்றன.

சுவாச நோய்
சுவாச நோய்

மருத்துவ வசதிகள் குறைவு

இந்தியாவை மையமாகக் கொண்டுள்ள தென் ஆசியப் பகுதி தான் ஆசியாவின் நாள்பட்ட நுரையீரல் நோய் மையமாக இருக்கிறது என்று லான்செட் ஆய்வு கூறுகிறது.

இந்த நோய் ஒரு லட்சம் மக்களில் 3,044 பேருக்கு உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆசியாவின் பல பகுதிகளில் இந்த நோய் பரவலாக இருந்தாலும், குறிப்பாக, சுகாதாரம் குறைவாக உள்ள பகுதிகளிலும், பொருளாதாரத்தில் கீழ் மட்டத்தில் இருக்கும் மக்கள் உள்ள பகுதிகளிலும் இந்த நோய் அதிகம் இருக்கிறதாம்.

இவர்களால் இந்த நோயிற்கு மருத்துவம் பார்க்க முடியாமல், மரணங்கள் அதிகம் நிகழ்கின்றன என்று ஆய்வு கூறுகிறது.

நோயைக் காட்டிலும், நோயிற்கான மருத்துவம் பார்க்க முடியாமல் மக்கள் இறப்பது இந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Source link