வாஷிங்டன்: ஈரானுடன் ஏற்பட்டுள்ள மோதலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த

வாஷிங்டன்: ஈரானுடன் ஏற்பட்டுள்ள மோதலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த அமெரிக்காவின் அவசர கையிருப்பிலிருந்து 17.2 கோடி பேரல் எண்ணெயை விடுவிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கா தன் எரிசக்தி பாதுகாப்புக்கு என ‘ஸ்ட்ராடஜிக் பெட்ரோலியம் ரிசர்வ்’ என்ற திட்டத்தை வைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய அவசரகால கச்சா எண்ணெய் கையிருப்பாக இது உள்ளது.இங்கு மொத்தம் 71 கோடி பேரல்கள் கச்சா எண்ணெயை சேமிக்க முடியும். தற்போது 41 கோடி பேரல்கள் இருப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

போர், இயற்கை பேரிடர் போன்றவை ஏற்பட்டால் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை பாதுகாக்கவும் இது உதவுகிறது.இந்நிலையில், ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கி கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளதால் சர்வதேச சந்தையில் விலை உயர்ந்துள்ளது.

பாதிப்பை குறைக்கும் வகையில், அமெரிக்காவின் அவசர கையிருப்பிலிருந்து 17.2 கோடி பேரல் எண்ணெய் விடுவிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இந்த எண்ணெய் வெளியீடு அடுத்த வாரம் தொடங்கி சுமார் 120 நாட்கள் நடைபெறும் என அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ்டோபர் ரைட் தெரிவித்தார்.

Source link