கன்டெய்னர்கள் நிறுத்த கூடுதல் இடம் வ.உ.சி., துறைமுகம் அறிவிப்பு

துாத்துக்குடி:மேற்காசிய போர்ச் சூழலை அடுத்து, வாடிக்கையாளர்களின் கன்டெய்னர்களை வைக்க கூடுதலாக 90,000 சதுர மீட்டர் இடத்தை ஒதுக்கியிருப்பதாக துாத்துக்குடி வ .உ.சி., துறைமுகம் அறிவித்து உள்ளது.

இது குறித்து துறைமுகத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறியதாவது:

மேற்காசியாவில் நிலவும் போர்ச்சூழலை கருத்தில் கொண்டு, எங்கள் வாடிக்கையாளர்களின் கன்டெய்னர்களை பாதுகாப்பாக வைத்திருக்க கூடுதலாக 90,000 சதுர மீட்டர் இடத்தை ஒதுக்கியிருக்கிறோம். கால அவகாசத்தை தாண்டியும் அவர்கள் கன்டெய்னர்களை வைத்து கொள்ளலாம்.

தற்போதைய நிலையில் அவை செல்லும் பாதை மாறக்கூடும் என்பதால் இந்த வசதியை அளிக்கிறோம். இதுவரை துறைமுக இயக்கமும் வர்த்தகமும் பாதிக்கப்படவில்லை என்பதால் அந்த வசதி இன்னும் பயன்படுத்தப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மெய்நிகர் மாதிரி செயலி இந்தியாவிலேயே முதல் முறையாக துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மெய்நிகர் மாதிரி செயலி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. துறைமுகத்தின் உட்கட்டமைப்பு, சரக்கு கையாளும் செயல்பாடு மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பின் நிகழ்நேர மெய்நிகர் பிரதியை உருவாக்கும் வகையில், டிஜிட்டல் டுவின் என்ற மெய்நிகர் செயலி திட்டம் அறிமுகமாகி உள்ளது.
இந்த வசதி இணைய தொழில்நுட்பம் சார்ந்த சென்சார்கள், ஜி.பி.எஸ்., கண்காணிப்பு, லைடார் வரைபட அமைப்பு, ட்ரோன் படமெடுப்பு மற்றும் சிசிடிவி வலையமைப்புகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, துறைமுக நிலைகளை நேரடியாக கண்காணித்து, அனைத்து செயல்பாட்டு துறைகளின் செயல்பாடுகளையும் சீராக ஒழுங்குபடுத்த உதவுகிறது.

Source link