'இந்திய நாகரிகத்தை காக்க மதமாற்றத்தை தடுக்கணும்'

சென்னை: ஜெனிவாவில் நேற்று நடந்த, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் பேசியதாவது:

பல தெய்வங்களை கொண்ட நாகரிகங்களில், பல்வேறு வாழ்க்கை முறைகளும், பல்வேறு நுகர்வு முறைகளும் காணப்படுகின்றன.

மிக முக்கியமாக இயற்கை அம்சங்களை தெய்வமாக வழிபடும் மரபால், இயற்கை பாதுகாக்கப்படுகிறது. உதாரணமாக, என் சொந்த ஊரான பண்ருட்டியில், விஷ்ணு பகவானால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் கெடிலம் நதி உள்ளது.

மதம் என்பது பெரும்பாலும் ஒரு கடவுள் என்ற கருத்தை மையமாகக் கொண்டது. அதனால், ஒரே சடங்கு, ஒரே வாழ்க்கை முறை, ஒரே நுகர்வு நடைமுறை உருவாகிறது.

பண்டைய எகிப்து, ரோம நாகரிகங்கள் போன்ற பல பழைய நாகரிகங்களை, ஏற்கனவே இழந்து விட்டோம். மதமாற்றங்களால், அவை மறைந்து விட்டன.

எனவே, உலகில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் பழமையான நாகரிகங்கள் இருக்கும் பகுதிகளில், வேகமாக நடக்கும் மதமாற்றங்களை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link