குத்துச்சண்டை: காலிறுதியில் சாஹில்

பாங்காக்: ‘பியூச்சர்ஸ்’ கோப்பை குத்துச்சண்டை தொடரின் காலிறுதிக்கு சாஹில், சந்திரிகா உள்ளிட்டோர் முன்னேறினர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், உலக குத்துச்சண்டை ‘பியூச்சர்ஸ்’ கோப்பை தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 60 கிலோ பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் சாஹில் துஹான், தஜிகிஸ்தானின் அமீர்பெக் மக்ரமோவ் மோதினர். இதில் சாஹில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில் (50 கிலோ) இந்திய வீரர் அம்பேகர் 5-0 என, தஜிகிஸ்தானின் அஜம்ஜோன் ஹாசனோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான 50 கிலோ பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் சந்திரிகா பூஜாரி, அமெரிக்காவின் ரூபி லோபஸ் மோதினர். இதில் சந்திரிகா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ‘ரவுண்டு-16’ போட்டியில் (57 கிலோ) அசத்திய இந்திய வீராங்கனை ராதாமணி லாங்ஜம், ஈகுவடாரின் மெலிசா கேரியனை தோற்கடித்தார். இந்திய வீராங்கனை குஞ்சன் (48 கிலோ) 5-0 என, போலந்தின் கட்டார்சினா கோர்னிசீவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Source link