பாலக்காடு: பாலக்காடு அருகே, குடியிருப்பு சான்று வழங்க, 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி கிளார்க்கை லஞ்ச

பாலக்காடு: பாலக்காடு அருகே, குடியிருப்பு சான்று வழங்க, 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி கிளார்க்கை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சுள்ளிமடை பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுத்த புகாரில், ‘குடியிருப்பு சான்றிதழ் வழங்க புதுச்சேரி ஊராட்சி கிளார்க், 2,500 ரூபாய் லஞ்சம் கேட்பதாக,’ தெரிவித்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுரையின்படி, ராதாகிருஷ்ணன் நேற்று காலை ஊராட்சி அலுவலகம் சென்று மலம்புழா பகுதியைச் சேர்ந்த கிளார்க் ஸ்ரீஜித், 39, என்பவரிடம், லஞ்ச பணத்தை கொடுத்தார்.

இதை கண் காணித்த இன்ஸ்பெக்டர் ஷிஜு ஆபிரகாம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர், கிளார்க்கை கையும் களவுமாக கைது செய்தனர்.

Source link