ஐ.பி.ஓ., 20 முதலீட்டு வங்கிகளை தேர்வு செய்த 'என்.எஸ்.இ.,'

‘என். எஸ்.இ.,’ நிறுவனம் தனது பிரமாண்ட ஐ.பி.ஓ.,வை முன்னெடுக்கும் வகையில், சுமார் 20 முதலீட்டு வங்கிகளை இறுதி பட்டியலுக்கு தேர்வு செய்துள்ளது.

‘கோட்டக் மஹிந்திரா கேபிடல், சிட்டி, ஜே.எம். பைனான்சியல், ஜே.பி.மோர்கன், ஹெச்.எஸ்.பி.சி., மற்றும் மோர்கன் ஸ்டான்லி’ உள்ளிட்ட முன்னணி உள்நாட்டு மற்றும் சர்வதேச வங்கிகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த ஒட்டுமொத்த ஐ.பி.ஓ., பணிகளையும் வெளிப்படைத்தன்மையுடன் கண்காணிக்க, ‘ரோத்ஸ்சைல்ட்’ நிறுவனம் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ., ஆவணங்களை தயாரிக்கவும், விதிகளை சரிபார்க்கவும் 7 முதல் 9 முன்னணி சட்ட நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Source link