புதுடில்லி: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக

புதுடில்லி: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அன்டோனியோ குட்டெரெஸ் வெ ளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் உருவாகி வரும் நெருக்கடி சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பொதுமக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதற்றத்தைக் குறைத்து பேச்சுவார்த்தை நடத்துவதே ஒரே வழி. அனைத்து தரப்பினரும் விரோதப் போக்கை நிறுத்தி, சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்தி, பொதுமக்களைப் பாதுகாத்து, உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, மேற்காசிய நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரான் உடனடியாக அனைத்து தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களையும், ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள தடைகளையும் நிறுத்த வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

Source link